--- --:--:-- --

ஏழை, எளிய குடும்பத்தினருக்கு 10,000 ரூபாயும், நடுத்தர குடும்பத்திற்கு 5 ஆயிரம் ரூபாயும் வழங்க வேண்டும்

5

நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வரும் நிலையில், மேற்கொண்டு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து, அனைத்துக் கட்சி தலைவர்களுடன் பிரதமர் மோடி முதன் முறையாக ஆலோசனை நடத்தினார்.

 

பெரும் அச்சுறுத்தலுக்கு ஆளாக்கி வரும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உலக அளவில் பலி எண்ணிக்கை ஜெட் வேகத்தில் உயர்ந்து இன்று 83 ஆயிரத்தை கடந்துள்ளது. இதில் இத்தாலி, ஸ்பெயின், அமெரிக்கா, பிரான்ஸ், பிரிட்டன், ஈரான், ஜெர்மனி, ஹாலந்து உள்ளிட்ட நாடுகளில் கொத்து கொத்தாக உயிர்களை காவு வாங்குகிறது கொரோனா வைரஸ்.

இந்நிலையில் இந்தியாவிலும் கொரோணா வைரஸ் பரவல், கடந்த இரு வாரங்களாக விஸ்வரூபமெடுத்து வருகிறது.நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில், தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 5 ஆயிரத்தை கடந்து 5124 ஆகவும், பலி எண்ணிக்கையும் 149 ஆக உயர்ந்துள்ளது.நாட்டில் போதிய பரிசோதனைக் கருவிகள் இல்லாத நிலையில், அதிகம் பேருக்கு கொரோனா சோதனை நடத்துவதில் தாமதம் ஆகி வரும் நிலையில், வரும் நாட்களில் கொரோனா பாதிப்பு இந்தியாவில் அதிகமாக இருக்கும் என நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.

 

இந்நிலையில், பிரதமர் மோடி இன்று அனைத்துக்கட்சி தலைவர்களின் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தார். நாடாளுமன்ற இரு அவைகளில் 5 எம்.பி.க்களுக்கு மேல் உள்ள கட்சிகளின் தலைவர்களுக்கு இந்த கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு விடப்பட்டிருந்தது. இந்தக் கூட்டம் வீடியோ கான்பரன்ஸ் மூலம் இந்த கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி இன்று காலை 11 மணிக்கு பிரதமர் மோடியுடன் உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர் எதிர்க்கட்சி தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினர்.

 

இந்த ஆலோசனையில் ஏழை எளிய குடும்பத்தினருக்கு 10,000 ரூபாயும் நடுத்தர குடும்பத்திற்கு 5 ஆயிரம் ரூபாயும் வழங்க வேண்டும் என்று பிரதமர் மோடியிடம் கோரிக்கை வைத்ததாக திமுக எம்பிக்கள் குழு தலைவர் டி ஆர் பாலு தெரிவித்துள்ளார். பிரதமர் மோடியுடனான அனைத்து கட்சி கூட்டத்தில் திமுக சார்பில் டி ஆர் பாலு காணொலி காட்சி மூலம் கலந்துகொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் ஊரடங்கு உத்தரவை நீதிபதி எந்த ஆட்சேபனையும் இல்லை என்று தெரிவித்தார்.

Leave a Reply

Right Menu Icon