--- --:--:-- --

கொரொனா அச்சத்தால் தாயின் உடலை எடுத்து செல்ல உறவினர்கள் வராத அவலம்…உதவிய முஸ்லிம் நண்பர்கள்!

2

மத்திய பிரதேசத்தின் இந்தூரில் உயிரிழந்த 65 வயது பெண் ஒருவரின் உடலை எடுத்து செல்ல வாகனங்கள் இல்லாததால் மகன்களும் அவர்களது முஸ்லிம் நண்பர்களும் இரண்டரை கிலோ மீட்டர் நடந்தே தூக்கி சென்ற நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

உடல்நலக்குறைவால் உயிரிழந்த பெண்ணின் இறுதி சடங்கில் கொரொனா அச்சம் காரணமாக ஒரு சில உறவினர்கள் பங்கேற்ற நிலையில், ஊரடங்கு உத்தரவால் வாகனங்கள் கிடைக்காமல் இரண்டு மகன்களும் அவர்களது முஸ்லிம் நண்பர்களும் உடலை மயானத்திற்கு எடுத்துச் சென்ற வீடியோ, புகைப்படங்கள் சமூக வலைதளங்கள் வாயிலாக வைரலாகியுள்ளது.

 

இளைஞர்களின் செயல் சகோதரத்துவ பண்புக்கு முன்மாதிரியாக உள்ளது என்று மத்திய பிரதேச முன்னாள் முதலமைச்சர் கமல்நாத் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Right Menu Icon