தமிழகத்தில் சில மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு
அடுத்த 48 மணி நேரத்திற்கு தமிழகத்தின் ஓரிரு இடங்களில் மழை பெய்யும் என சென்னை மண்டல வானிலை மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தின் ஒரு சில இடங்களில் கடந்த 24 மணி நேரத்தில் லேசான மழை பெய்தது. அதிகபட்சமாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 3 சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
உதகமண்டலத்தில் தலா இரண்டு சென்டி மீட்டர் மழையும், உதகை, கூடலூர் ஆகிய இடங்களில் தலா ஒரு சீட்டில் மீட்டர் மழையும் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழகத்தின் அடுத்த 48 மணி நேரத்திற்கு ஓரிரு இடங்களில் மழை பெய்யும் என சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் வெயிலின் தாக்கம் அதிகபட்சமாக 35 டிகிரி செல்சியஸ் அதிகமாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.






