வீடுவீடாக இலவசமாக அத்தியாவசிய பொருட்களை வழங்கிய ஊராட்சி மன்ற தலைவர்

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


திருவள்ளூர் அருகே ஊரடங்கு உத்தரவால் வீட்டிற்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் கிராம மக்களுக்கு இரண்டு வாரத்திற்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை இலவசமாக வீடு வீடாக சென்று வழங்கிய ஊராட்சி மன்ற தலைவரை கிராம மக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

 

தமிழகத்தில் கொரொனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வருவதால் அதனை கட்டுப்படுத்தும் வகையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட உளுந்தை கிராமத்தில் வீடுகளை விட்டு வெளியே வராமல் வீட்டிற்குள் முடங்கி உள்ளனர்.

 

அவர்களுக்கு ஊராட்சி மன்ற தலைவர் ரமேஷ் சார்பில் ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் இரண்டு வாரத்திற்கு தேவையான அரிசி, காய்கறி, எண்ணெய் மற்றும் மளிகை பொருட்களை இலவசமாக வீடு வீடாக சென்று வழங்கினார். மேலும் சுத்தமாக இருக்கவும் தேவையில்லாமல் வெளியே செல்வதை தவிர்க்கவும் அறிவுரை வழங்கினார்.

 

இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய கவுன்சிலர் கிராம நிர்வாக அதிகாரி உட்பட பலர் கலந்து கொண்டு கிராம மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வழங்கி வைரஸ் தொற்று குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.


Leave a Reply