வைரஸின் வீக் பாயிண்ட்டை கண்டுபிடித்த விஞ்ஞானிகள்..!

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


கொரொனா வைரசின் வீக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். கொரொனா வைரஸ் உடலில் மருந்துகளால் எளிதில் தாக்கப்படுவதற்கு ஏற்ற ஒரு குறிப்பிட்ட பகுதியை அமெரிக்க அறிவியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

 

சார்ஸ் நோயால் பாதிக்கப்பட்டிருந்த நோயாளி ஒருவரின் உடலை ஆராய்ந்து அறிவியலாளர்கள் அவரது உடல் சார்ஸ் நோய்க்கு எதிராக உருவாக்கிய ஒரு ஆண்டிபாடியை டிராக் செய்த போது அதில் ஒரு குறிப்பிட்ட பகுதி வழியாக உள் நுழைவதை கண்டறிந்துள்ளனர். அதேபோல அந்த ஆண்டிபாடி கொரொனா வைரஸ் உடலின் எந்த பகுதியில் சென்று அமர்கிறது என்பதையும் அந்த அறிவியலாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

 

இந்த கண்டுபிடிப்பு கொரொனா வைரஸ் உடலில் எந்த பகுதியை மருந்துகள் கொண்டு தாக்கலாம் என்பதை அறிய உதவியுள்ளது என்றும் அந்தப் பகுதிதான் வைரஸ் என்று என்ற ஆய்வாளர் தெரிவித்துள்ளார். இந்த கண்டுபிடிப்புகள் வைரஸின் உடலமைப்பை கண்டுபிடிக்கவும் உதவியதால், அதன் மூலம் காண தடுப்பூசியை வடிவமைக்கவும் உதவும் என ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்.


Leave a Reply