மருத்துவர்களுக்கு ஏற்பட்ட கொரொனாவால் ஹாஸ்பிட்டலுக்கு வைக்கப்பட்ட சீல்!
மும்பை பக்காடு மருத்துவமனையில் மருத்துவர்கள், செவிலியர்கள் மருத்துவப் பணியாளர்கள் உள்ளிட்ட 52 பேருக்கு கொரொனா உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து அந்த மருத்துவமனை சீல் செய்யப்பட்டு கட்டுப்பாட்டு மண்டலத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
மேலும் அந்த மருத்துவமனையில் பணியாற்றும் கேரளாவை சேர்ந்த 150 செவிலியர்கள் உள்ளிட்ட 300க்கும் மேற்பட்ட ஊழியர்கள் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.கொரொனா அறிகுறிகளுடன் அனுமதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு பொது வார்டில் எந்தவித பாதுகாப்பு கவசங்களும் இன்றி சிகிச்சை அளிக்க பணிக்கப்பட்டதாகவும், கொரொனா பரவ இதுவே காரணம் என்றும் செவிலியர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.






