வேளாண் விளைபொருள் விற்பனை கட்டண விலக்கு!

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் உழவர்களின் விளைபொருட்களை சந்தைக்கு கொண்டு சென்று விற்பதில் சிரமம் இருந்தால் அந்தந்த மாவட்ட துணை வேளாண் இயக்குனரை தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என்று குறிப்பிட்டுள்ளார். அவர்கள் சரக்கு போக்குவரத்திற்கான அனுமதி பெற்றுத்தர உதவி பெறுவார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

 

காய்கறிகள், பழங்களை குளிர்பதன கிடங்கில் சேமித்து வைக்க ஏப்ரல் 30ஆம் தேதி வரை கட்டணம் பெறப்படாது என்றும் அதை அரசே ஏற்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார். காய்கறிகள் பழங்களை அவர்களிடம் கொள்முதல் செய்ய தேர்வு செய்யப்பட்ட உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கு 10 லட்சம் ரூபாய் வரை கடன் வழங்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.

 

நகர்புற நுகர்வோருக்கான தோட்டக்கலை துறையின் 500 நடமாடும் விற்பனை வாகனங்களின் மூலம் காய்கறிகள் பழங்கள் கொடுக்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளார். அவர்களிடம் கொள்முதல் செய்யும் வணிகர்கள் ஒரு விழுக்காடு சந்தை கட்டணத்தை ஏப்ரல் 30ஆம் தேதி வரை செலுத்த வேண்டியதில்லை என்றும் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.


Leave a Reply