--- --:--:-- --

சீனாவில் கூட்டம் கூட்டமாக மக்கள்! கொரொனா அபாயம்!

6

சீனாவில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு உள்ளதால் மக்கள் சுற்றுலா தளங்களுக்கு அதிக அளவில் செல்கின்றனர். இதனால் மீண்டும் தொற்று ஏற்பட வாய்ப்பு இருப்பதாக சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர். கொரொனா வைரஸ் தொற்றால் கடந்த மூன்று மாதங்களாக சீன மக்கள் வீடுகளுக்குள் முடங்கிக் கிடந்தனர்.

 

இந்த நிலையில் வைரஸ் தொற்று கட்டுக்குள் வந்ததால் பல்வேறு பகுதிகளில் ஊரடங்கு தளர்த்தப்பட்டு இருக்கிறது. இதனால் மனதளவில் பாதிக்கப்பட்டிருந்த அந்த மக்கள் வார விடுமுறை நாட்கள் என்பதால் பல்வேறு சுற்றுலாத் தலங்களில் நூற்றுக்கணக்கில் குவிந்து வருகின்றனர். குறிப்பாக மாகாணத்திலுள்ள மலை பூங்காவை பார்க்க 20,000 பேருக்கு மேல் மக்கள் குவிந்ததால் அங்கு நெருக்கடி ஏற்பட்டது.

 

இந்த நிலையில் இது போன்று மக்கள் கூடுவது மீண்டும் தொற்று ஏற்பட வழிவகுக்கும் என்று சுகாதாரத் துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon