நிலத்தில் குழி தோண்டி மது பாட்டில் பதுக்கல்!
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே நிலத்திற்குள் குழிதோண்டி புதைத்து சட்டவிரோதமாக விற்பனை செய்யப்பட்டு வந்த நூற்றுக்கணக்கான மது பாட்டில்களை போலீசார் கைப்பற்றினர். நாலாட்டின் புதூர் அருகே விவசாய நிலங்களிலும், சாலையோரங்களிலும் நிலத்திற்குள் பானைகளை புதைத்து அவற்றுக்குள் மது பாட்டில்களை பதுக்கி விற்பனை செய்து வருவதாக கூறப்படுகிறது.
கடந்த வாரம் இது தொடர்பான ரகசிய தகவலின் பேரில் அப்பகுதிக்கு சென்ற போலீசாரிடம் ஆசாமி ஒருவர் குழி தோண்டி அடுக்கடுக்காக மது பாட்டில்களை எடுத்து வைத்த காட்சிகள் வெளியாகியுள்ளன.






