--- --:--:-- --

தெரியாமல் பூச்சி மருந்தை கலந்து போண்டா சுட்டு குடும்பத்தாரோடு உண்ட பெண் பலி!

2

அரக்கோணம் அருகே கவனக்குறைவாக பூச்சி மருந்து கலந்த போண்டாவை உண்ட பெண் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் 3 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அரக்கோணத்தை அடுத்த எஸ்ஆர் கண்டிகையில் சேர்ந்த பெரியசாமி நேற்று போண்டா செய்வதற்கான மாவுடன் பயிருக்கு தெளிக்கும் பூச்சி மருந்தை வாங்கியுள்ளார்.

 

வாங்கி வைத்துவிட்டு அவர் வெளியே சென்று விட்ட நிலையில் போண்டா மாவுடன் இருந்தது பூச்சி மருந்து என்று தெரியாமல் அதனையும் கலந்து பெரியசாமியின் மனைவி போன்டா செய்துள்ளார். இதனை சாப்பிட்டு அனைவருக்கும் வாந்தி மயக்கம் ஏற்பட்ட நிலையில், முதலில் சோளிங்கர் அரசு மருத்துவமனையும் பின்னர் தனியார் மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டனர்.

 

அதில் பெரியசாமியின் மருமகள் பாரதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பெரியசாமி, அவரது மனைவி லட்சுமி,மகன் சுகுமார் ஆகியோருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon