நேபாளத்தில் நீட்டிக்கப்பட்டது ஊரடங்கு உத்தரவு…!

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


நேபாளத்தில் ஊரடங்கு உத்தரவு நாளையுடன் முடிவடைய உள்ள நிலையில் ஏப்ரல் 15ஆம் தேதி வரை நீட்டித்து அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது. கொரொனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக ஊரடங்கு உத்தரவை பல நாடுகள் அமல்படுத்தி உள்ளன.

 

அந்த வகையில் நேபாளம் கடந்த மார்ச் 24 ஆம் தேதி முதல் தொடர்ந்து ஏழுநாட்களுக்கு ஊரடங்கு உத்தரவை பிறப்பித்தது. அதன்பின் ஏப்ரல் 7ஆம் தேதி வரை நீடித்தது. நாளையுடன் ஊரடங்கு உத்தரவு முடிவடையும் நிலையில் கொரொனாவால் கட்டுக்குள் வராததால் மேலும் எட்டு நாட்களுக்கு அதாவது ஏப்ரல் 15ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது.

 

நேபாளத்தில் இதுவரை 109 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவர் குணம் அடைந்துள்ளார்.


Leave a Reply