--- --:--:-- --

ஈரோட்டில் முகக்கவசம் அணிந்து எளிமையாக நடைபெற்ற திருமணம்…!

3

ஊரடங்கு உத்தரவு காரணமாக ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் மக்கள் முக கவசம் அணிந்து திருமணம் செய்து கொண்டனர். தொட்டம்பாளையம் பகுதியை சேர்ந்த சாய்ராபானு,முகமது பாஷா ஆகிய இருவருக்கும் எளிமையான முறையில் திருமணம் நடைபெற்றது. இதில் உறவினர்கள் 20 பேர் மட்டுமே கலந்து கொண்டனர்.

 

திருமணத்தில் பங்கேற்று அனைவரும் கிருமிநாசினி பயன்படுத்திய நிலையில் மணமக்கள் உட்பட அனைவரும் முக கவசம் அணிந்து இருந்தனர். தேனி மாவட்டம் கம்பத்தில் ஊரடங்கு உத்தரவை மீறி சாலைகளில் சென்றவர்களின் இருசக்கர வாகனங்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். குற்றங்களை தடுக்கும் விதமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

 

ஊரடங்கை மீறி வெளியே நடமாடும் அவர்களுக்கு காவல்துறையினர் நூதன தண்டனைகளை வழங்கி வருகின்றனர். இந்த நிலையில் கம்பத்தில் விதிமுறைகளை மீறி சாலையோரங்களில் சுற்றித்திரிந்த 30 பேர் மீது வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் 40 பேரின் இருசக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்தனர்.

செங்கல்பட்டு மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவை மீறி தனியார் நிறுவனத்திற்கு வேலைக்கு ஆட்களை ஏற்றி செல்ல வந்த வாகனத்தை பொது மக்கள் தடுத்து நிறுத்தினார். அபாயம் காரணமாக ஊரடங்கு அமலில் இருக்கிறது. இந்த நிலையில், மறைமலை நகரில் செயல்பட்டு வரும் தனியார் நிறுவனத்திற்கு வேலையாட்கள் ஏற்றிச்செல்ல மதுராந்தகம் அடுத்த செய்யூர் வந்ததாக தெரிகிறது.

 

இதனை அறிந்த கிராம மக்கள் ஊரடங்கு காரணமாக வாகனத்தில் இருந்த நபர்களை திருப்பி அனுப்பினர். மேலும் தனியார் நிறுவனத்தின் வாகனத்தை தடுத்து நிறுத்தினர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon