மக்கள் நடமாட்டம் இல்லாததால் சாலைகளில் வந்து செல்லும் முதலைகள்!

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


அமெரிக்காவின் கொரொனாத் தொற்று காரணமாக மக்கள் நடமாட்டம் இன்றி சாலைகள் வெறிச்சோடின. அதனால் முதலை ஒன்று சாவகாசமாக நடந்து சென்றது. தெற்கு கரோலினாவில் உள்ள மல்டி கடற்கரை பகுதிக்கு கொரொனா தொற்று காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் குறிப்பிட்ட பகுதி முழுவதும் மக்கள் நடமாட்டம் இன்றி மயான அமைதியுடன் காணப்படுகிறது.

 

சாலைகள் அனைத்தும் வெறிச்சோடி காணப்படுவதாலும் மக்கள் நடமாட்டம் இல்லாததால் அருகில் இருந்த ஆற்றில் வாழ்ந்த முதலை ஒன்று சாலை பக்கம் வந்தது. பின்னர் யாரும் இல்லாததால் சாவகாசமாக நடந்து சென்று சாலையை கடந்து சென்றது. பின்னர் குடியிருப்பு பகுதிகளின் வழியாக சென்ற அந்த முதலை பின்னர் வேறு இடத்தில் உள்ள ஒரு நீர் படுகையில் சென்று மறைந்து போனது.


Leave a Reply