டிரெண்டாகி வரும் டல்கோனா காபி! நடிகைகளின் இன்ஸ்டா பதிவு!
ஊரடங்கு காலத்தில் மக்கள் டிக் டாக், பேஸ்புக் போன்ற செயலிகளில் பொழுதுகளை போக்கி வரும் அதேவேளையில் இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது. கொரொனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக அறிவிக்கப்பட்ட ஊரடங்கு வீடுகளுக்குள் முடங்கியுள்ள மக்களில் சிலர் தங்களது தனித்திறமைகளை இணையதளங்களில் வெளிக்காட்டி வருகின்றன.
அப்படி சமையல் ஆர்வலர்கள் மற்றும் காபி பிரியர்கள் மத்தியில் சென்று வருவதுதான் டல்கோனா காபி. நடிகைகளும், காபி பிரியர்களும் இதனை ஒரு டாஸ்க் ஆக செய்து அவற்றை வீடியோவாகவும் படம்பிடித்து இன்ஸ்டாகிராம், டிக்டாக் உள்ளிட்ட வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். எளிய முறையில் தயாரித்துக் கொள்ள முடியும் என்பதாலேயே இது தற்போது டிரெண்ட் ஆகியுள்ளது.

தயாரிக்க தேவைப்படும் பொருட்கள் எளிதில் கிடைக்கக்கூடியவை. காபி, தூள், சர்க்கரை, சுடுதண்ணீர், பால் ஆகியவை தேவைப்படும் மூலப்பொருட்கள். காபி தூள், சர்க்கரை ஆகிய இரண்டையும் தலா இரண்டு தேக்கரண்டி எடுத்து பொன்னிறமாக வரும் வரை அரைத்துக் கொள்ள வேண்டும் கூடவே சுடு தண்ணீருடன். பின்னர் அந்த கரைசலில் நன்கு குளிரூட்டப்பட்ட பாலின் மேற்பரப்பில் படிய வைத்து விட்டால் டல்கோனா காபி தயாராகிவிடுகிறது.
டல்கோனா காபி செய்வதையே வீடியோ பதிவாகி தங்கள் சமூக வலைதளப் பக்கங்கள் மூலம் காபித்தூள் நிறுவனங்களுக்கு விளம்பரம் செய்து வருகின்றனர். வீடுகளுக்குள் முடங்கி இருக்கும் குவாரண்டின் டேஸ் என்ற பெயரில் சமூக வலைதளங்களில் நிரம்பி வழிந்து வரும் சவால் பட்டியலில் தற்போது காபியும் சேர்ந்துள்ளது.






