--- --:--:-- --

கொரொனா வைரஸை அடுத்து இணைய வைரஸ்…! உஷார் மக்களே!

7

கொரொனா வைரஸ் மனித குலத்தை அச்சுறுத்தி வரும் சூழலில் மேலும் ஒரு சுமையாக இணையதள வைரஸ் தாக்குதல் அண்மையில் அதிகரித்துள்ளன. கொரொனா வைரஸ் அச்சத்தால் நாடு முழுவதும் உள்ள பல்வேறு நிறுவன பணியாளர்களுக்கு வீடுகளிலிருந்து பணியாற்றும் வழங்கும் வசதி வழங்கப்பட்டுள்ளது .

 

இதனால் தகவல் தொழில்நுட்பம், வங்கி சேவை உள்ளிட்ட பல்வேறு துறைகளை சேர்ந்த பணியாளர்கள் வீடுகளிலிருந்து லேப்டாப் மற்றும் டெஸ்க்டாப் கம்ப்யூட்டர்களில் வேலை பார்த்து வருகின்றனர். கொரொனா பாதிப்பு மற்றும் தடுப்பது குறித்து அதிக மெயில்களை அனுப்பி பயனாளர்களை ஈர்க்கும் ஹேக்கர்கள் அதனை வைத்து ஒட்டுமொத்த கம்ப்யூட்டரையே உளவு பார்ப்பது தெரிய வந்துள்ளது.

 

எனவே சந்தேகத்திற்கு உரிய அல்லது தெரியாத நபர்களிடம் இருந்து வரும் மின்னஞ்சல்களில் அட்டாச்மென்ட் பைல்களை உள்ளே சென்று பார்க்க வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு மின்னஞ்சல்கள் உடன் வரும் பைல்களைத் திறந்து பார்த்தால் அதில் இருந்து வெளியேறும் இணையதள வைரஸ் மனித உடலுக்குள் புகுந்து வைரஸ் ஆக்கிரமிப்பது போலவே நமது கம்ப்யூட்டர் முழுவதையும் ஆக்கிரமித்து வங்கி கணக்கு விவரங்கள் புகைப்படங்கள் உள்ளிட்ட முக்கிய தகவல்களை திருட வாய்ப்பு ஏற்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கின்றனர் .

 

வைரஸ் தடுப்பு சாப்ட்வேர் அப்டேட்கள் இல்லாததே இவ்வகை தாக்குதல் அதிகரிப்புக்கு காரணம் என்று சைபர் அட்டாக் தடுப்பு நிபுணர்கள் கூறுகின்றனர். வீடுகளிலிருந்து பணியாற்றும் போது வைரஸ் தடுப்பு சாஃப்ட்வேர்கள் கம்ப்யூட்டர்களை முறையாக மேற்கொள்வது ஒன்றே இதற்கு சரியான தீர்வாக அமையும் என்பது நிபுணர்களின் அறிவுரையாகும்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon