பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் மருத்துவமனையில் அனுமதி..! கொரோனா தொற்று முற்றியதாக தகவல்!!

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


கொரோனா அறிகுறியுடன் 10 நாட்களாக வீட்டில் தம்மை தனிமைப்படுத்திக் கொண்ட பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு வைரஸ் தாக்கம் அதிகமானதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 

உலகை அச்சுறுத்தலுக்கு ஆளாக்கி வரும் கொரோனா வைரஸ் தொற்று, உலக நாடுகளின் தலைவர்கள் பலரையும் விட்டு வைக்கவில்லை என்றே கூறலாம். ஸ்பெயின் நாட்டின் இளவரசி மரியா தெரசா கடந்த வாரம் கொரோணாவால் உயிரிழந்தார். பிரிட்டன் இளவரசர் சார்லஸ், கொரோனா பாதிப்புக்கு ஆளாகி, சிகிச்சைக்குப் பின் குணமடைந்தார்.

 

பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கும் கொரோனா அறிகுறி உறுதி செய்யப்பட்டால், கடந்த 10 நாட்களாக வீட்டில் தம்மை தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் ஜான்சனுக்கு கொரோனாவின் தாக்கம் அதிகமான நிலையில், நேற்றிரவு மருத்துவமனையில் அவசரமாக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 

ஏற்கனவே பிரிட்டனில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பரவல் விஸ்வரூபமெடுத்து, 10 நாட்களில் பலி எண்ணிக்கையும் 5 ஆயிரத்தை எட்டியுள்ள நிலையில், பிரதமர் போரிஸ் ஜான்சன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது அந்நாட்டு மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஆனாலும் அவருடைய உடல் நிலை சீராக இருப்பதாகவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக பிரிட்டன் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

போரிஸ் ஜான்சன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தகவல் வெளியானவுடன், அமெரிக்க அதிபர் டிரம்ப் டுவிட்டரில் வெளியிட்டு பதிவில், போரிஸ் ஜான்சன் நல்ல நண்பர். மன தைரியம் மிக்கவர். விரைவில் மீண்டு வருவார் என பதிவிட்டுள்ளார்.


Leave a Reply