--- --:--:-- --

ஊரடங்கை மீறி கூட்டமாக ஜெபக்கூட்டம் நடத்திய தலைமை ஆசிரியர்!

8

ஈரோடு மாவட்டம் பவானி அருகே குறிச்சி வாய் மேடு பகுதியில் மேசியா என்ற பெயரில் ஜெபவீடு நடத்தி வருபவர் ராணி. இவர் செல்லி கவுண்டனூர் அரசு தொடக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார்.இவரது கணவர் ஜெயராமன் பர்கூர் காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வருவதாக கூறப்படுகிறது.

 

இந்த நிலையில் தலைமை ஆசிரியரான இவர் கொடிய நோய்களை ஒழிக்க கூட்டு ஜெபம் நடத்த குட்டியானை என்று அழைக்கப்படும் டாட்டா ஏஸ் வாகனம் ஒன்றை எடுத்துக் கொண்டு பெரிய குறும்பாளையம் காலனி பகுதிக்கு டிரம்ஸ் மேளத்துடன் ஜெப பாடல்களை பாடிக் கொண்டு சென்றதாக கூறப்படுகிறது.

 

அப்போது பெரிய குறும் பாளையத்தை சேர்ந்த பொதுமக்கள் ஜெப கோஷ்டியை தடுத்து நிறுத்தி சமூக விலகல் குறித்த விழிப்புணர்வு இல்லாமல் 144 தடை உத்தரவு உள்ள காலத்தில் கும்பலாக பத்துக்கும் மேற்பட்ட ஆட்களை கூட்டி கொண்டு ஆட்டோவில் செல்லலாமா என ராணியிடம் கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது ஊருக்குள் ஒரு குடும்பத்திற்கு சுபம் தருவதற்கு ஜெபக்கூட்டம் நடத்தப்போவதாக அடம் பிடித்தவர்களை அப்பகுதி மக்கள் எச்சரித்தனர்.

தான் போலீஸ்காரர் மனைவி என்ற தோரணையில் பதிலுக்கு பதில் பேசியதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு அப்பகுதி மக்கள் தகவல் அளித்ததை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற பவானி போலீசார் சரக்கு வாகனத்தில் வந்தவர்களை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர்.

 

தடையை மீறி மத ஜபம் செய்ய சென்றதாக ராணி உள்ளிட்ட 7 பேர் மீது அளிக்கப்பட்ட புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் 144 தடை உத்தரவு காலத்தில் அரசின் உத்தரவை மீறி பிரச்சாரத்திற்கு கூட்டமாக அழைத்துச் சென்றதாக மேசியா ஜெப கூட நிர்வாகியும், தலைமை ஆசிரியருமான ராணி மற்றும் ஓட்டுநர் சுப்பிரமணி இருவரையும் கைது செய்து வாகனத்தையும் பறிமுதல் செய்துள்ளனர்.

 

கடவுளர்கள் எல்லாம் நோயால் பாதிக்கப்பட்டவர்களை குணப்படுத்த அரசு மருத்துவமனைகளில் பணியாற்றி வருகின்றனர். முடிந்தால் அவர்களுக்கும், அரசுக்கும் அனைவரும் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். அதை விடுத்து கும்பலாக வெளியே சுற்றி தங்களுக்குத் தாங்களே செய்வினை வைத்துக் கொண்டால் இப்படி கம்பி என்னும் நிலைதான் ஏற்படும் என்பதை சம்பந்தப்பட்டவர்கள் உணர வேண்டும்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon