சிங்கப்பூரில் கொரொனா பரவல் குறைவு..! காரணம் என்ன?
கொரொனா வைரஸ் பரவலை தடுக்க முடியாமல் வல்லரசு நாடான அமெரிக்காவே திணறும் நிலையில் சீனாவிற்கு மிக அருகில் இருக்கும் சிங்கப்பூர் மட்டும் எப்படி கொரொனாவை கட்டுப்படுத்தியது ? உலகம் முழுவதும் கொரொனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தற்போது 11 லட்சத்தை கடந்துள்ளது .உயிரிழந்தோர் எண்ணிக்கை 60 ஆயிரத்தை நெருங்கி வருகிறது.
சீனாவிலிருந்து பரவிய கொரொனா ஐரோப்பிய நாடுகள் மிகப் பெரிய விளைவை கொடுத்து வருகின்றன. அதேவேளையில் சீனாவிற்கு மிக அருகில் இருக்கும் சிங்கப்பூருக்கும் நோய் தாக்குதல் பெரிய அளவில் ஏற்படவில்லை. முன்கூட்டியே செயல்படுத்தப்பட்ட நேர்த்தியான திட்டம் இதற்கு காரணமாக கூறப்படுகிறது. உலக சுகாதார நிறுவனம் சர்வதேச பயணத்துக்கு தடை விதிக்கும் முன்பே அதாவது பிப்ரவரி ஒன்றாம் தேதியே சிங்கப்பூர் அரசு சர்வதேச விமானங்களுக்கு தடை விதித்தது.
எல்லைகளையும் உடனடியாக முடிய சிங்கப்பூர் நோய்த்தொற்று பாதித்தவர்களை கண்டறிந்து தனிமைப் படுத்தியது. அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களும் அடையாளம் காணப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டனர். இதற்காக 2003ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்த திட்டத்தை செயல்படுத்தியது. இதன் காரணமாக உயிரிழப்பு ஏற்படுவது பெருமளவு தடுக்கப்பட்டது.
கடந்த வாரம் வரை 150க்கும் குறைவானவர்களுக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டு இருந்த நிலையில் தற்போது ஆயிரத்தை கடந்துள்ளது எண்ணிக்கை. இதனால் சற்று அதிர்ச்சி அடைந்து இருக்கும் சிங்கப்பூர் அரசு வரும் 7ம் தேதி முதல் ஒரு மாதத்திற்கு முழு ஊரடங்கை அமல்படுத்தப் போவதாக அறிவித்துள்ளது.
அத்தியாவசிய பொருட்கள் விற்கும் கடைகளுக்கு மட்டுமே விலக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரொனாவுக்கு எதிரான போரில் கூடுதலான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அவசியம் என்பதால் அரசு இந்த முடிவை எடுத்திருப்பதாக பொதுமக்களிடம் தெரிவித்திருக்கிறார். சிங்கப்பூர் பிரதமர் லீ அமெரிக்கா போன்ற நாடுகளே கொரொனா பரவி வருவதை தடுக்க திணறி வரும் சூழலில் சிறிய நாடான சிங்கப்பூர் துரிதமாக செயல்பட்டு பல்வேறு வகையிலான நடவடிக்கைகளை எடுத்து வருவது உலகநாடுகளுக்கு பாடமாக அமைந்திருக்கிறது.






