தனது தந்தை ஊரடங்கு உத்தரவை மீறுவதாக மகன் அளித்துள்ள புகார்!
டெல்லியில் ஊரடங்கை மீறி தனது தந்தை அடிக்கடி வீட்டை விட்டு வெளியே சுற்றுவதாக இளைஞர் ஒருவர் காவல்துறையில் புகார் அளித்துள்ளார். வசந்த்கஞ் பகுதியை சேர்ந்த 30 வயது இளைஞர் அளித்த புகார் கடிதத்தில் தான் வற்புறுத்தியும் தனது பேச்சை தந்தை கேட்பதில்லை என்றும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து டெல்லி காவல்துறையினர் அவரது தந்தை மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.






