கொரோனா அறிகுறியுடன் நடமாடினால் ரூ.76 லட்சம் அபராதம்
ஐக்கிய அரபு அமீரகத்தில் ஊரடங்கு நேரத்தின்போது அத்தியாவசிய காரணங்கள் இன்றி வீட்டை விட்டு வெளியே இருப்பவர்களுக்கு ஐந்து ஆண்டுகள் சிறையும் இந்திய மதிப்பில் 76 லட்சம் ரூபாய்வரை அபராதமும் விதிக்கப்படும் என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
வைரஸ் தொற்று உள்ளவர்கள் குறித்து தெரிந்தோர் அரசிடம் தகவல் தெரிவிக்காமல் இருப்பவர்களுக்கு மூன்று ஆண்டுகள் சிறையும் சுமார் 8 லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படும் என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.






