ஊரடங்கால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிகளை வழங்கிய மு.க.ஸ்டாலின்

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


திமுக தலைவர் மு க ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் கொரொனா ஊரடங்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு பல்வேறு உதவிகளை வழங்கினார். ஆறாவது மண்டல அலுவலகத்தில் ஆயிரம் தூய்மைப் பணியாளர்களுக்கு கடந்த ஏழு நாட்களாக ஸ்டாலின் சார்பில்உணவு வழங்கப்பட்டு வருகிறது.

 

இன்றைய காலை சிற்றுண்டியை அவர் நேரடியாக வழங்கியதோடு பாதுகாப்பு உபகரணங்களையும் வழங்கினார். அவதிக்குள்ளாகி இருக்கும் வெளிமாநிலங்களை சேர்ந்தவர்களுக்கும், 500 ஆட்டோ ஓட்டுநர்களுக்கு, 500 ரூபாய் உதவித்தொகை எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட 50 குழந்தைகளுக்கு மூன்று மாதங்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வழங்கினார்.

 

ஆய்வு பணிகளை முடித்துக் கொண்டு திரும்பும் வழியில் மளிகை கடையில் பொதுமக்கள் கூட்டமாக இருப்பதை கண்டு சமூக இடைவெளியை அவசியத்தை வலியுறுத்தினார். பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல் துறையினரின் சேவையை பாராட்டி நன்றி தெரிவித்ததோடு முகக் கவசங்கள் செய்தவர்களை மு.க ஸ்டாலின் வழங்கினார்.


Leave a Reply