கொரோனாவை தடுக்க கண்டுபிடிக்கப்பட்ட பிசிஜி !
பிறந்தவுடனேயே அல்லது ஒரு வயதுக்குள்ளாகவோ குழந்தைகளுக்கு பிசிஜி தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதனால் சிறுவயதிலேயே நுரையீரலைத் தாக்கும் காச நோய்க் கிருமிகளிடமிருந்து பாதுகாப்பும் பெறப்படுகிறது. இந்தியா உள்ளிட்ட வளரும் நாடுகளில் இதுபோன்ற தடுப்பூசி போடுவது நீண்டகால அரசு கொள்கையாக உள்ளது.
ஆனால் அமெரிக்கா, இத்தாலி, பிரான்ஸ் போன்ற நாடுகள் இதனை பின்பற்றுவதில்லை. இந்த நிலையில் மேட்ரிக்ஸ் என்ற மருத்துவ இணையதளத்தில் அமெரிக்க ஆய்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. அதில் பிசிஜி போடப்பட்ட நாடுகளில் குழந்தை இறப்பு விகிதம் குறிப்பிடத்தக்க அளவில் குறைவாக இருக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
பிசிஜி தடுப்பூசியை பல ஆண்டுகளுக்கு முன்னரே கட்டாயம் ஆக்கிய நாடுகளில் இருக்கும் வயதானவர்களுக்கு கொரொனா பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது என்றும் அந்த ஆய்வு தெரிவிக்கிறது. அதேசமயம் தாமதமாக 1984க்கு பின்னர் பிசிசிஐ அறிமுகப்படுத்திய ஈரானில் பலி எண்ணிக்கை அதிகமாகி இருப்பதையும் அந்த ஆய்வு சுட்டிக் காட்டி வருகிறது.
பிசிஜி தடுப்பூசி எதிரான பலமிக்க ஒரு ஆயுதமாக இருக்கும் என்று ஆய்வு கூறுகிறது. 1949 ஆம் ஆண்டு முதலே இந்தியாவில் பிசிஜி தடுப்பூசி முறை நடைமுறையில் உள்ளதால் அதை எதிர்த்து போராடி வெற்றி பெறலாம் என இந்திய மருத்துவக் கவுன்சில் உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த ஆய்வு முடிவுகள் வெளியானதைத் தொடர்ந்து பிசிசிஐ சுகாதார பணியாளர்களிடம் சோதித்து பார்க்க பிரிட்டன், ஆஸ்திரேலியா, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் முடிவு செய்துள்ளன.






