--- --:--:-- --

ஊரடங்கு உத்தரவால் வேலையிழப்பு ..! சவர தொழிலாளர்களுக்கு ரூ.15 ஆயிரம் நிவாரணம் வழங்க கோரிக்கை !!!

16f6577d-0c64-4094-ae64-e6205339b18a

கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், வேலையிழந்து தவி சவரத் தொழிலாளர்களுக்கு ரூ.15 ஆயிரம் நிவாரணம் வழங்க கோரிக்கை விடப்பட்டுள்ளது.

 

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக, சமூக விலகலை கடைபிடிக்கும் பொருட்டு மத்திய அரசு சார்பில் வரும் ஏப்ரல் 14 வரை 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.பால், மளிகை,மருந்தகம் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் விற்கும் கடைகள் மட்டும் குறிப்பிட்ட நேரங்களில் திறந்திருக்க மாநில அரசு உத்தரவிட்டது.இதனால் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டன.

இந்த, நிலையில் இன்று தமிழ்நாடு சவரத்தொழிலாளர்கள் சங்கத்தின் கோவை மாநகர மாவட்டம் சார்பில் அதன் தலைவர் ராமசாமி தலைமையிலான நிர்வாகிகள் இன்று கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் ராசாமணியை சந்தித்து மனு அளித்தனர்.

 

பின்னர்,செய்தியாளர்களை சந்தித்த அதன் தலைவர் ராமசாமி, சமூக விலகலை கடைபிடிக்கும் விதமாக மத்திய,மாநில அரசுகள் விதித்த 144 தடை உத்தரவை பின்பற்றி கடைகளை அடைத்துள்ளதாகவும்,இதனால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும்,கடை ஒன்றிற்கு ரூ.15 ஆயிரம் நிவாரணத்தொகையாக வழங்கினால் தங்களது வாழ்வாதாரம் காப்பாற்றப்படும் என தெரிவித்தார்.தாங்கள் கொடுத்த மனுவினை பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் ராசாமணி தெரிவித்துள்ளதாகவும் கூறினார்.


க்

Leave a Reply

Right Menu Icon