--- --:--:-- --

கேரளாவில் சிக்கியுள்ள 30 தமிழர்கள்! கண்ணீர் மல்க வீடியோ!

14

சொந்த ஊருக்கு திரும்ப முடியாமல் கேரளாவில் சிக்கித் தவிக்கும் தங்களை மீட்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த 30 பேர் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளனர். தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த 30 பேர் கடந்த 20 நாட்களுக்கு முன்பு வேலைக்காக கேரளா சென்றுள்ளனர்.

 

இந்நிலையில் கேரளாவில் ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அங்கு 144 தடை உத்தரவை தீவிரமாக அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் தமிழக கேரள எல்லையில் மூடப்பட்டுள்ளதால் வேலைக்கு சென்றவர்கள் சொந்த ஊர் திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர்.

 

உணவுக்கு கூட வழியில்லாமல் தவித்து வருவதாக வேதனை தெரிவிக்கும் அவர்கள் தமிழக அரசு தங்களை மீட்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வீடியோ மூலம் கண்ணீர் மல்க வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon