--- --:--:-- --

ஈரோடு – நாமக்கல் மாவட்ட எல்லைப்பகுதி அடைப்பு!

21

கொரொனா தடுப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக சென்னை, காஞ்சிபுரம், ஈரோடு மாவட்டங்களை முழுமையாக மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில் ஈரோடு – நாமக்கல் மாவட்ட எல்லைப்பகுதியான குமாரபாளையம் மற்றும் பள்ளிபாளையம் பகுதிகளில் உள்ள காவிரி பாலங்கள் இன்று இரண்டாவது நாளாக அடைக்கப்பட்டுள்ளன.

 

இதன் காரணமாக ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த பொதுமக்கள் யாரும் நாமக்கல் மாவட்ட எல்லைக்குள் வர இயலாது. நாமக்கல் மாவட்ட பகுதி மக்கள் ஈரோடு மாவட்ட எல்லைக்குள் செல்லமுடியாது. பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பாதுகாப்பு வளையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

 

ஈரோடு மாவட்டம் பவானிக்கு பணிக்கு செல்லும் தொழிலாளர்கள் பதினோராம் வகுப்பு பொது தேர்வு எழுத சென்ற மாணவ, மாணவிகள் சுமார் நான்கு கிலோ மீட்டர் தூரம் சுற்றி தேசிய நெடுஞ்சாலை வழியாக சென்றனர்.நாமக்கல் மாவட்ட எல்லை பகுதியில் பாதுகாப்பு பணியில் ஏராளமான போலீசார் ஈடுபடுத்தப்பட்டு உள்ளதால் அங்கு பரபரப்பு நிலவுகிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon