--- --:--:-- --

உத்தரவுகளை தீவிரத்துடன் பின்பற்றி உங்களையும் குடும்பத்தினரையும் பாதுகாத்து கொள்ளுங்கள் !

20

சென்னை, பெங்களூரு, டெல்லி, மும்பை, கொல்கத்தா உள்ளிட்ட நாடு முழுவதும் உள்ள 70 மாவட்டங்கள் முழுமையாக முடக்கப்பட்டு அத்தியாவசிய சேவைகள் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் இந்த முழுமையான முடக்கத்தை மக்களில் பலரும் தீவிரமாக எடுத்துக்கொள்ளவில்லை என்று பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.

 

உத்தரவுகளை தீவிரத்துடன் பின்பற்றி உங்களையும் குடும்பத்தினரையும் பாதுகாத்து கொள்ளுங்கள் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார். சட்டங்களும், விதிகளும் பின்பற்றப்படுவதை மாநில அரசுகள் உறுதிப்படுத்துமாறு பிரதமர் கேட்டுக் கொண்டுள்ளார். கொரொனா பரவலை தடுக்க நகரங்களை முடக்கும் நடவடிக்கையை கண்டிப்புடன் மேற்கொள்ளுமாறு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

 

இதற்கான விதிகளையும், உத்தரவுகளையும் மீறுபவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்குமாறு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இந்த நிலைமையின் தீவிரத்தை உணர்ந்து செயல்படுமாறு பிரதமர் மோடி
வேண்டுகோள் விடுத்திருந்த நிலையில் மத்திய அரசின் உத்தரவு மாநில அரசுகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon