--- --:--:-- --

வீடுவீடாக சென்று சோப்பு,மாஸ்க், கிளவுஸ், கிரிமி நாசினி அடங்கிய கிட்டை இலவசமாக வழங்க வேண்டும் – தமிழக அரசுக்கு புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி கோரிக்கை !!!

14

கோவையில் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர்.கிருஷ்ணசாமி இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது,அவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸின் கோர தாக்குதலினால் பல்லாயிரக்கணக்கான பலியாகி உள்ளனர்.இந்த நிலையில் இவ்வைரஸ் இந்தியாவிற்கும் பரவி வருகிறது. இன்று வரை இந்தியாவில் 260 பேருக்கு கொரோனா தாக்கி உள்ளதாக கூறப்படுகிறது என தெரிவித்தார்.

மேலும்,அதனை தடுக்க வேண்டிய பொறுப்பு அரசுக்கும், பொதுமக்களுக்கும் உண்டு என்றும், பிரதமர் அறிவித்துள்ளது போல நாளை யாரும் வீட்டை விட்டு வெளியில் வராமல் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என கூறிய அவர் கொரோனா பரவாமல் தடுக்க பல்வேறு விதமான வழிமுறைகள் உள்ளன. பரவாமல் தடுக்க சளி, காய்ச்சல் உள்ளவர்கள் சுய கட்டுபாடுடன் தனிமைப் படுத்தி கொள்ள வேண்டும்என்றும்,
மத்திய அரசு சொல்வதை மாநில அரசு அமல்படுத்தி வருகிறது என்றார்.

மேலும்,வலுவான மருத்துவ கட்டமைப்பு கொண்ட மாநில அரசு வீடுவீடாக சென்று சோப்பு,மாஸ்க், கிளவுஸ், கிரிமி நாசினி அடங்கிய கிட்டை இலவசமாக வழங்க வேண்டும் என்றும் தமிழக அரசிற்கு கோரிக்கை விடுத்தார். மேலும், கொரோனா வைரஸ் பரவலால் மூடப்பட்டுள்ள தொழில்துறை நிறுவனங்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு மத்திய அரசு பொருளாதார நிதி உதவி அளிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

Leave a Reply

Right Menu Icon