--- --:--:-- --

கொரானா பீதி: தமிழகத்தில் எல்கேஜி யுகேஜி மாணவர்களுக்கு விடுமுறை..! 7 மாவட்டங்களில் 5-ம் வகுப்பு வரையும் லீவு!!

Screenshot_2020-03-13-21-07-08-747_com.android.chrome

கொரானா அச்சுறுத்தல் காரணமாக தமிழகம் முழுவதும் எல்கேஜி, யுகேஜி மாணவர்களுக்கும், கேரள எல்லையை ஒட்டியுள்ள 7 மாவட்டங்களில் 5-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கும் மார்ச் 31-ந் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

 

கொரானா அச்சுறுத்தலால் இந்தியாவில் இதுவரை 81 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். முதல் உயிரிழப்பாக கர்நாடகாவில் 76 வயது முதியவர் ஒருவரும் பலியாகியுள்ளார். இதனால் நாடு முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கேரளா, கர்நாடகா, டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் பள்ளிகளுக்கும் மார்ச் 31-ந் தேதி வரை விடுமுறை விடப்பட்டுள்ளன.

இந்நிலையில் தமிழகத்திலும் அனைத்து பள்ளிகளிலும் எல்கேஜி, யுகேஜி மாணவர்களுக்கு வரும் திங்கட்கிழமை முதல் மார்ச் 31-ந் தேதி வரை விடுமுறை விடப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

 

மேலும் அண்டை மாநிலமான கேரளாவில் கொரானா மட்டுமின்றி பறவைக் காய்ச்சல் பாதிப்பும் அதிகமாக இருப்பதால் அம்மாநிலத்தின் எல்லையோர மாவட்டங்களான குமரி, நெல்லை, கோவை, திருப்பூர், தேனி, நீலகிரி, தென்காசி ஆகிய 7 மாவட்டங்களில் எல்கேஜி முதல் 5-ம் வகுப்பு வரை விடுமுறையும் மார்ச் 31-ந் தேதி வரை விடுமுறை விடப்படுவதாகவும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon