--- --:--:-- --

தமிழிசை சவுந்தரராஜனை பற்றி ஃபேஸ்புக்கில் அவதூறாக பதிவிட்ட நடிகர் சாதிக் பாட்ஷா!

1.1

தெலுங்கானா ஆளுநர்தமிழிசை சவுந்தரராஜனை முகநூலில் அவதூறாக சித்தரித்து பதிவிட்ட திரைப்பட துணை நடிகர் கைது செய்யப்பட்டார். திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அரிசி கடை தெருவை சேர்ந்தவர் சாதிக்பாட்சா. இவர் பல்வேறு திரைப்படங்களில் துணை நடிகராக நடித்துள்ளார்.

 

இந்த நிலையில் சாதிக்பாட்சா கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது முகநூல் பக்கத்தில் தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனை அவதூறாக சித்தரிக்கும்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். இந்த பதிவு சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.

இந்நிலையில் மன்னார்குடி நகர பாஜக தலைவராக மன்னார்குடி நகர காவல்நிலையத்தில் இதுகுறித்து புகார் அளித்தார். அதன்படி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சாதிக்பாட்சாவை கைது செய்தனர்.தொடர்ந்து அவரை 15 நாள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon