பக்தர்களுக்கு கொரோனா அறிகுறி உள்ளதா என்பதை கண்டறிந்த பிறகே திருமலைக்கு அனுமதி
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு கொரொனா அறிகுறி உள்ளதா என்பதை கண்டறிந்த பிறகே திருமலைக்கு அனுமதிக்கப்படுகின்றனர்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வரும் பக்தர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு ஸ்ரீவாரிமெட்டு ஆகிய இரண்டு மலைகளில் பாதயாத்திரையாகவும், வாகனங்களில் திருமலைக்கு செல்லும் பக்தர்களுக்கு கொரொனா வைரஸ் பாதிப்பு உள்ளதா என்பதை கண்டறியும் விதமாக உடல் வெப்பத்தை பரிசோதிக்கும் இயந்திரம் கொண்டு பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.
100 டிகிரிக்கு மேல் உடல் வெப்பம் இருப்பது கண்டறியப்பட்டால் அவர்களை உடனே அரசு மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள வார்டிற்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்து பரிசோதனைக்கு உட்படுத்தி வருகின்றனர்.
இதேபோல் திருமலையில் பக்தர்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகளில் இரண்டு மணி நேரத்திற்கு ஒரு முறைகிருமி நாசினிகளை கொண்டு சுத்தம் செய்யும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




