--- --:--:-- --

ஈரானிலிருந்து மும்பை திரும்பிய 44 இந்தியர்கள்! கொரானா பரிசோதனை

10

கொரொனா அச்சம் காரணமாக இரண்டாவது கட்டமாக ஈரானிலிருந்து 44 இந்தியர்கள் அழைத்து வரப்பட்டுள்ளனர். மதியம் 12 மணியளவில் மும்பை விமான நிலையத்திற்கு வந்து சேர்ந்தவர்கள் ஏர் இந்தியா விமானம் மூலமாக ராஜஸ்தானில் உள்ள வைரஸ் தடுப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

 

முதற்கட்டமாக கொரானா பரிசோதனை அவர்களுக்கு நடத்தப்படுகிறது. பின்னர் அவர்கள் 14 நாட்கள் வரை தொடர மருத்துவக் கண்காணிப்பில் இருப்பார்கள். முதல் கட்டமாக கடந்த 10ஆம் தேதி 58 பேர் அழைத்துவரப்பட்டனர். இரண்டாவது கட்டமாக 120 பேர் வருவார்கள் என கூறப்பட்ட நிலையில் 44 பேர் மட்டுமே அழைத்து வரப்பட்டுள்ளனர்.

 

தமிழக மீனவர்களை நூற்றுக்கு மேற்பட்டோர் உட்பட 6 ஆயிரம் இந்தியர்கள் ஈரானில் சிக்கியுள்ளனர். அவர்களும் விரைவில் அழைத்து வரப்படுவார்கள் என வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon