--- --:--:-- --

இந்திய துறைமுகங்களில் வெளிநாட்டு பயணிகள் கப்பல்கள் நுழைய தடை

8

கொரொனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக 31-ஆம் தேதி வரை வெளிநாட்டு பயணிகள் கப்பல்கள் இந்திய துறைமுகங்களின் நுழைய மத்திய அரசு தடை விதித்துள்ளது. இதுகுறித்து சென்னை துறைமுக கழக போக்குவரத்து பிரிவு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

 

அதில் வெளிநாடுகளை சேர்ந்த பயணிகள் கப்பல்கள் இந்திய துறைமுகங்களில் நுழைய மார்ச் மாதம் 31 ஆம் தேதி வரை தடை விதிப்பது என்று மத்திய அரசு முடிவு செய்திருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

 

ஆதலால் எந்த வெளிநாட்டிலிருந்து பயணி கப்பல்கள் வந்தாலும் சென்னை துறைமுகத்தில் 31-ஆம் தேதி வரை நுழைய அனுமதி அளிக்கப்பட மாட்டாது எனவும் அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon