ஏடிஎம் போனா கொரொனா வந்துரும்..!
கைகளால் தொடுவதன் மூலம் 80% கொரோனா வைரஸ் பரவி வருவதாக உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது. இந்நிலையில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான ஒரு பயன்படுத்தும் கேட்டு அமைப்புகளில் அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் ஏதும் மேற்கொள்ளப்படவில்லை என்பது சற்று கவலையை ஏற்படுத்தியுள்ளது.
விமான நிலையங்கள், ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள் என மக்கள் அதிகம் கூடும் இடங்களில் ஒரு நாம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. ஆனால் அவற்றுக்கு அருகில் உள்ள ஏடிஎம் மையங்களில் இதுவரை எந்த பாதுகாப்பு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டதாக தெரியவில்லை என்கிறார்கள் வாடிக்கையாளர்கள்.
தேவைப்படும் பணம் என அனைத்து விவரங்களையும் ஏடிஎம் இயந்திரங்களில் கைகளால் தொட்டே பதிவுசெய்ய வேண்டும் என்பதால் தயக்கத்துடனேயே வாடிக்கையாளர்கள் ஏடிஎம் மையத்தில் நுழைய வேண்டியுள்ளது. வங்கிகள் சார்பில் ஏடிஎம் மையங்களில் கிருமிநாசினி போன்றவை வைக்கப்படாவிட்டாலும் அதுகுறித்த விழிப்புணர்வு பதாகைகளை வைத்து இருக்கலாம் என்கிறார்கள் வாடிக்கையாளர்கள்.
சென்னை மற்றும் புறநகர்ப் பகுதியில் மொத்தம் பல ஆயிரம் ஏடிஎம்கள் இருக்கும் நிலையில் எல்லா இடத்திலும் கிருமிநாசினி வைப்பது என்பது நடைமுறை சாத்தியமல்ல என்று கூறப்படுகிறது. இதனால் ஏடிஎம் மையத்திற்கு செல்லும் முன் கைகளில் கிருமி நாசினி தடவிக் கொள்வது ஏடிஎம் சென்று வந்த பிறகு கைகளை நன்றாக சோப்பு போட்டு கழுவி அது போன்ற செயல்கள் மூலம் நம்மை நாமே காத்துக் கொள்ள முடியும்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




