--- --:--:-- --

வங்கதேசத்திலும் கொரானோ பாதிப்பு..! பிரதமர் மோடியின் டாக்கா பயணம் ரத்து!!

images

நமது அண்டை நாடான வங்கதேசத்தில் ஓம் புராணா பதிவிட்டு உறுதி செய்யப்பட்டுள்ளது இதனால் நாட்டுக்கு அரசு முறைப் பயணமாக செல்லவிருந்த பிரதமர் மோடியின் சுற்றுப்பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது வங்கதேச முன்னாள் அதிபர் முஜிபுர் ரஹ்மானின் நூற்றாண்டு பிறந்த நாள் விழாவை அந்நாட்டு அரசு சிறப்பாக கொண்டாட ஏற்பாடு செய்திருந்தது.

 

இம்மாதம் 17-ந் தேதி நடைபெறும் இந்த நூற்றாண்டு விழாவில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்க நமது பிரதமர் மோடிக்கு அழைப்பு விடப்பட்டிருந்தது .இதை யேற்று அரசு முறைப் பயணமாக பிரதமர் மோடி டாக்கா செல்ல இருந்தார்.

 

இந்நிலையில், உலகை அச்சுறுத்தும் கொரானோ வைரஸ் தாக்குதல் வங்கதேசத்தையும் விட்டு வைக்கவில்லை. அந்நாட்டில் 3 பேருக்கு கொரானோ பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, பிரதமர் மோடி உள்பட வெளிநாட்டுத் தலைவர்கள் பலர் பங்கேற்க இருந்த முஜிபுர் ரஹ்மான் நூற்றாண்டு விழா கொண்டாட்டத்தை ரத்து செய்வதாக வங்கதேச அரசு அறிவித்துள்ளது இதனால் பிரதமர் மோடியின் வங்கதேச சுற்றுப் பயணமும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon