நிர்பயா குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை தேதி! மார்ச் 20!
நிர்பயா குற்றவாளிகள் நால்வரையும் மார்ச் 20ஆம் தேதி தூக்கிலிடுமாறு டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நிர்பயா குற்றவாளிகளில் கடைசியாக கருணை மனு தாக்கல் செய்த மனுவை குடியரசுத் தலைவர் நிராகரித்து நான்கு பேரையும் தூக்கிலிடுவதற்கான புதிய தேதியை அறிவிக்க கோரி டெல்லி மாநில அரசு சார்பில் கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
குற்றவாளிகளுக்கான அனைத்து நீதி வாய்ப்புகளும் முடிவடைந்துவிட்டன. அவர்களை உடனடியாக தூக்கிலிட வேண்டுமென டெல்லி அரசின் சார்பில் வாதிடப்பட்டது. இதை விசாரித்த நீதிபதி தர்மேந்திரா 4 பேரையும் மார்ச் 20 ஆம் தேதி அதிகாலை 5.30 மணிக்கு தூக்கிலிட உத்தரவிட்டார். டெல்லியை சேர்ந்த மருத்துவ மாணவி கடந்த 2012 ஆம் ஆண்டு ஓடும் பேருந்தில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார்.
சிங்கப்பூர் கொண்டு செல்லப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த வழக்கில் முகேஷ் குமார், பவன் குப்தா, வினய் சர்மா, அக்ஷய் மற்றும் சிறுவன் ஒருவன் கைது செய்யப்பட்டான்.
இதில் ராம் சிங் சிறையில் தூக்கிட்டு உயிரிழந்த நிலையில் சிறுவன் சீர்திருத்த பள்ளியில் அனுமதிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டார். மற்ற நால்வருக்கும் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், மூன்றுமுறை அவர்களுக்கான தூக்கு தண்டனை நிறைவேற்றப்படுவது தள்ளிவைக்கப்பட்டது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




