--- --:--:-- --

காரமடை அரங்கநாதர் கோவில் மாசி மகத்தேர்த்திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது !!!

3

கோவை மாவட்டம் காரமடையில் மிகவும் புகழ்பெற்ற அருள்மிகு அரங்கதாத சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது.கோவை மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற வைணவ திருத்தலங்களில் ஒன்றாகும்.இக்கோவிலில் ஆண்டு தோறும் மாசி மாதத்தில் தேர்த்திருவிழா நடைபெறுவது வழக்கம்.அதன்படி இந்தாண்டு தேர்த்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவங்கியது.

 

முன்னதாக கோவில் நிர்வாகம் சார்பில் நேற்று முன்தினம் இரவு திருமுனை நகர சோதனை என்ற கிராம சாந்தி நடைபெற்றது.இதற்காக இன்று அதிகாலை நடை திறக்கப்பட்டு அரங்கநாத சுவாமிக்கு திருமஞ்சன பூஜை நடைபெற்றது.அதனை தொடர்ந்து ஸ்ரீதேவி,பூதேவி,பெருமாளுக்கு சிறப்பு பூஜைகளும், அபிஷேகங்களும் நடைபெற்றது.

 

திருமலை நல்லான் சக்கரவர்த்தி சுவாமிகள்,வேத வியாசர் சுதர்சன பட்டர் சுவாமிகள்,ஸ்ரீதர் பட்டர் சுவாமிகள் மற்றும் கோவில் அர்ச்சகர்கள் கருடாழ்வார் சின்னம் பொறித்த கொடியினை வேத மந்திரங்கள் ஓத சிறப்பு வழிபாடு நடைபெற்று பின்னர் கோவில் பிரகாரத்தில் வலம் வந்தனர்.பின்னர்,கொடி மரத்தில் கொடியேற்றப்பட்டது.

கொடியேற்றத்தின் போது வானத்தில் கருடன் வட்டமிட்டது.இதனை கண்ட பக்தர்கள் கோவிந்தா,கோவிந்தா கோஷமிட்டது விண்ணை அதிரச்செய்தது. விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் வரும் மார்ச் 8 ஆம் தேதி நடைபெற உள்ளது.அதனையொட்டி அன்று காலை 05.30 மணியளவில் அரங்கநாத பெருமாள்,சீதேவி,பூதேவி சமேதராய் திருத்தேருக்கு எழுந்தருள உள்ளார்.பின்னர்,மாலை 04.30 மணியளவில் திருத்தேரோட்ட நிகழ்வு நடைபெற உள்ளது.

 

விழா ஏற்பாடுகளை கோவில் தக்காரும்,உதவி ஆணையருமான விமலா,செயல் அலுவலர் மருது பாண்டியன்,கோவில் கணக்காளர் மகேந்திரன் மற்றும் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon