12ம் வகுப்பு பொதுத்தேர்வு நேரம் 3 மணி நேரமாக அதிகரிப்பு
பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கான தேர்வு நேரம் இரண்டரை மணி நேரத்திலிருந்து மூன்று மணி நேரமாக உயர்த்தி வழங்கப்பட உள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
திருப்பூரில் முதலிபாளையம் மற்றும் வேலம்பாளையம் பகுதிகளில் உள்ள அரசுபள்ளிகளில் கட்டப்பட்ட புதிய கட்டடங்களை திறந்து வைத்த அமைச்சர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். 12ஆம் வகுப்பு தேர்வுகள் மார்ச் 2-ம் தேதி தொடங்கி 24ம் தேதி வரை நடைபெறும் எனவும், இந்த தேர்வை 8 லட்சத்து 16 ஆயிரத்து 359 பேர் எழுத உள்ளதாகவும் தெரிவித்தார்.
இந்த தேர்வை எழுதும் மாணவர்களுக்கான நேரம் இரண்டரை மணி நேரத்திலிருந்து மூன்று மணி நேரமாக உயர்த்தப்பட்டுள்ளதாகவும் 15 நிமிடம் கேள்வித்தாளை படிப்பதற்காக கூடுதல் நேரம் ஒதுக்கப்படும் எனவும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




