--- --:--:-- --

டெல்லி வன்முறையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 35 ஆக அதிகரிப்பு

1

டெல்லி வன்முறையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 35 ஆக உயர்ந்துள்ளது. நிலைமை ஓரளவு கட்டுக்குள் இருப்பதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

டெல்லியிலுள்ள சாகராபாத்தில் அண்மையில் குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிரான போராட்டம் நடைபெற்று வந்த நிலையில், அதே பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு ஆதரவாளர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் இரு தரப்புக்கும் இடையே கடந்த திங்கட்கிழமையன்று மோதல் வெடித்தது.

 

கற்களை கொண்டு இரு தரப்பினரும் கடுமையாக மோதிக் கொண்டனர். முஸ்தபா நகர், பஜன் புரா, மஜ்பூரி , சம்பா என டெல்லியின் வடகிழக்கு பகுதிகளில் வன்முறை பரவியது. ஆங்காங்கே கடைகள் அடித்து நொறுக்கப்பட்டு தீ வைக்கப்பட்டன. வாகனங்களும், வழிபாட்டுத் தலங்களும் சேதப்படுத்தப்பட்டன.

 

வன்முறை தொடர்பாக இதுவரை 18 முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும், மோதல் தொடர்பாக 16 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் டெல்லி காவல்துறையின் மக்கள் தொடர்பு அதிகாரி தெரிவித்துள்ளார்.

 

இந்நிலையில் வன்முறையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 35 ஆக அதிகரிக்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இருநூற்றுக்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon