தற்கொலை செய்து கொண்ட பெண்….புகார் கூறும் வீடியோ
பழவேற்காடு ஏரியில் மகளுடன் தற்கொலை செய்து கொண்ட பெண் தற்கொலைக்கு காரணமானவர்கள் மீது புகார் கூறும் வீடியோ வெளியாகியுள்ளது. சுண்ணாம்பு குளத்தை சேர்ந்த வீரம்மாள் அவரது மனைவி பவானி ஆகியோரது உடல்கள் அடுத்தடுத்த நாட்களில் ஏரியில் கண்டெடுக்கப்பட்டன.
இந்த நிலையில் வீரம்மாள் தனது கணவர் ரவியுடன் சேர்ந்து பேசும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில் வீரம்மாளின் கணவர் ரவிக்கும், அவரது அண்ணன் சிவா என்பவருக்கும் இல்ல பிரச்சனை இருந்ததாகவும், இது தொடர்பான பிரச்சினையில் ரவியின் குடும்பத்தினர் தாக்கப்பட்டதாகவும் கூறுகின்றனர்.

ஏற்கனவே விஷமருந்தி தற்கொலைக்கு முயன்று இருப்பதாகவும் தங்களது இறப்பிற்கு சிவாவே காரணம் என்றும் தெரிவிக்கின்றனர். தற்போது வீரம்மாளும், அவரது மகளும் தற்கொலை செய்த நிலையில் மாயமான ரவி மற்றும் அவரது மகன் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.





