--- --:--:-- --

ஏ‌டி‌எம் இயந்திரத்தில் ஸ்கிம்மர் கருவி… நைஜீரியர் கைது!

13

புதுச்சேரியில் ஏடிஎம் எந்திரத்தில் ஸ்கிம்மர் கருவி பொருத்திய நைஜீரிய இளைஞரை போலீசார் கைது செய்தனர். லாஸ்பேட்டை அருகே இயங்கி வரும் எஸ்பிஐ ஏடிஎம் மையத்தில் பணம் எடுக்க வந்த பொதுமக்கள் எந்திரத்தில் ஸ்கிம்மர் கருவி பொருத்தப்பட்டு இருப்பதை அறிந்து போலீசாருக்கு தகவல் அளித்தனர். மேலும் அதனை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களிலும் பதிவிட்டனர்.

 

இதையடுத்து வழக்கு பதிவு செய்த போலீசார் சிசிடிவி பதிவுகளை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டதில் சென்னையில் தங்கியிருக்கும் நைஜீரியாவை சேர்ந்த இளைஞர் புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் ஏடிஎம் இயந்திரங்களில் ஸ்கிம்மர் கருவியை பொருத்தியது தெரியவந்தது.

 

இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் போலி ஏடிஎம் கார்டுகள், லேப்டாப்களை பறிமுதல் செய்தனர். பல்கேரியா, வெனிசுலாவை சேர்ந்த மேலும் இருவரையும் தீவிரமாக தேடி வருகின்றனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon