--- --:--:-- --

சக மாணவர்கள் கேலி, கிண்டல் செய்வதால் கயிறு கொடுங்க..நா சாகனும் என கூறும் சிறுவன்!

12

எனக்கு ஒரு கயிறு கொடுங்கள், நான் சாகவேண்டும், ஒன்பது வயதிலேயே தற்கொலையைப் பற்றி இந்த சிறுவனுக்கு எப்படி தெரியும்? சக பள்ளி மாணவர்களின் கேலியும், கிண்டலும் தான் சிறுவனை இந்த அளவிற்கு பாதித்துள்ளது என்றால் நம்பமுடிகிறதா? தலை பெரியதாகவும், கை, கால்கள் வளர்ச்சி குன்றியும் காணப்படும் தன்னை பள்ளியில் உள்ள அனைவரும் கேலி செய்து கொடுமைப்படுத்துவதாக கூறி சிறுவன் கதறும் வீடியோ பலரது நெஞ்சத்தையும் உலுக்க வைத்துள்ளது.

 

ஆஸ்திரேலியாவில் இருக்கும் பள்ளியில் இந்த சிறுவன் படித்து வருகிறான். இவரது உடல் குறைபாட்டால் வீட்டிலேயே வைத்து இவனது தாய் கல்வி கற்றுக் கொடுத்து வந்தார். ஆனால் மற்ற குழந்தைகளைப் போல் ஆடிப்பாடி கல்விகற்க ஆசைப்பட்டதால் கியூடனை பள்ளியில் சேர்த்துவிட்டால் அவனது தாயார். அங்கு சேர்த்து ஒரு வருடமாகவே அவன் பள்ளிமாணவர்கள் சிலரால் எப்போதும் துன்புறுத்தலுக்கு ஆளாகி வந்துள்ளான்.

 

உச்சமாக அவரது தாய் முன்னிலையிலேயே அவமானங்களை எதிர் கொண்டான். ஆனால் சக குழந்தைகளை குற்றவாளிகளாக சித்தரிக்க விரும்பாத அவரது தாய் தனது மகனுடைய வாக்கு மூலத்தை மட்டும் வீடியோவாக்கி இணையத்தில் பதிவு ஏற்றினார். அந்த சிறுவனுடைய வீடியோ சர்வதேச அளவில் கவனத்தை பெற்றது. உலகெங்கிலுமுள்ள முகம் தெரியாத நபர்கள், பிரபலங்கள் என பலரும் அவனுக்கு ஆதரவுக்கரம் நீட்டி வருகின்றனர். ஹாலிவுட் நகைச்சுவை நடிகர் வில்லியம்ஸ் சிறுவனுக்காக நிதி திரட்ட தொடங்கினார்.

 

இதன் மூலம் ஒரு கோடியே 30 லட்சம் ரூபாய் நிதி வசூல் ஆகியுள்ளது. இதை கொண்டு தனது தாயுடன் அமெரிக்காவிற்கு வந்து சுற்றி பார்க்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார் வில்லியம்ஸ். பிரபல ஹாலிவுட் நடிகரான கியூ ஜாக்மேனும் சிறுவனுக்கு ஆதரவுக்கரம் நீட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் பதிவிட்டுள்ள டுவிட்டர் வீடியோவில் சிறுவனுக்கு தான் ஒரு சிறந்த நண்பராக இருப்பேன் என்றும் யாரும் அவனின் குறையை கிண்டல் செய்ய வேண்டாம் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.

 

இதேபோல் சிறுவனின் வீடியோ ஆஸ்திரேலிய ரக்பே வீரர்களின் நெஞ்சையும் உலுக்கியது. உடனே இந்த வீரர்கள் தங்களுடைய மைதானத்திற்கு அழைத்து சென்றிருக்கிறார்கள். அதாவது தங்கள் அணியை ஒரு மாதகாலம் இவன்தான் வழிநடத்த வேண்டும் எனக் கூறியுள்ளனர். இத்துடன் ஐ ஸ்டண்ட் வித் கியுடன் என்ற ஹேஸ்டேக்கும் வைரலாகி வருகிறது.

 

குழந்தைகளுக்கு நல்லொழுக்கம் கற்பிக்க வேண்டியது பெற்றோர்களே, மாற்று திறனாளிகளிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென குழந்தைகளுக்கு சொல்லி கொடுப்பது பெற்றோர்களின் கடமை என்பதை தற்போது உணர்த்தியுள்ளது இவனின் வலிமிகுந்த அழுகை.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon