--- --:--:-- --

படப்பிடிப்பில் உயிரிழந்தவர்களை நினைக்கும் போது கண்ணீர் முட்டி வருகிறது!

2

இந்தியன் 2 படப்பிடிப்பு தளத்தில் மூன்று பேர் உயிரிழந்த சம்பவத்தை நினைக்கும் போது கண்களில் நீர் முட்டிக்கொண்டு வருவதாக நடிகர் சிம்பு வேதனை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியன்-2 படப்பிடிப்பு தளத்தில் மூன்று பேர் உயிரிழந்த செய்தி அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது என தெரிவித்துள்ளார்.

 

விபத்தில் இறந்தவர்களோடு அவர்களின் குடும்பத்தின் கனவுகளும் தொலைந்து போய் விட்டதை நினைக்கும் போது கண்ணீர் வருவதாக வேதனை தெரிவித்துள்ள சிம்பு, இழப்பைத் தாங்கும் பலத்தை இறைவன் தர வேண்டிக் கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.

இனி ஒரு போதும் இப்படி ஒரு இழப்பு நிகழாதவாறு கவனமாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள சிம்பு பணமோ, வார்த்தைகளோ உயிர் இழப்பை ஈடு செய்யாது என்பதால் அனைவரும் பாதுகாப்பை உறுதி செய்து பணி செய்யுமாறு சிம்பு கேட்டுக் கொண்டுள்ளார்.

Leave a Reply

Right Menu Icon