--- --:--:-- --

பொது மக்களை அச்சுறுத்தும் வகையில் சாலையில் நடனமாடும் இளைஞர்!

3

புதுக்கோட்டையை சேர்ந்த கண்ணன் என்ற இளைஞர் டிக்டாக்கில் தனது திறமையை வெளிப்படுத்துவதாக கருதி பேருந்து நிலையம், சாலைகள் உள்ளிட்ட பொது இடங்களில் மக்கள் மத்தியில் திடீரென உள்ளே புகுந்து நடனமாடி அதனை டிக்டாக்கில் பதிவேற்றம் செய்து வந்தார்.

 

அவரது நடவடிக்கைகள் போக்குவரத்திற்கு இடையூறாகவும் பொது மக்களுக்கும் பெண்களுக்கும் அச்சுறுத்தல் ஏற்படும் வகையிலும் உள்ளதாக எதிர்ப்பு எழுந்துள்ளது. இந்த இளைஞரின் செயல் ஏற்கனவே டிக்டாக்கில் பிரபலமாக உள்ள ஜிபி முத்துவை எரிச்சலடைய வைத்துள்ளது.

 

இதற்கிடையே சாலைகளிலும், பொது இடங்களிலும் பெண்கள் மற்றும் முதியவர்களை அச்சுறுத்தும் வகையிலும் அதிர்ச்சி அளிக்கும் வகையிலும் செயல்படும் அவன் மீது நடவடிக்கை எடுத்து அவர் இனி இதுபோல் செயல்படாத வண்ணம் தடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகும்.

Leave a Reply

Right Menu Icon