--- --:--:-- --

பிரம்மாண்ட திமிங்கலத்தின் கழுத்தில் இறுக்கிய கயிறு

14

மாலத்தீவு கடல்பகுதியில் கழுத்தில் கயிறு இறுக்கப்பட்ட நிலையில் போராடிய பிரம்மாண்ட திமிங்கலம் காப்பாற்றப்பட்டுள்ளது. அப்பகுதியில் உள்ள ஒரு தீவின் அருகே திமிங்கல சுறா ஒன்று பெரிய அளவிலான கயிறு ஒன்று கடந்த டிசம்பர் மாதம் முதல் கழுத்தில் இறுகிய நிலையில் சுற்றி வந்தது தெரியவந்தது.

 

மிகப்பெரிய மீன்பிடி கப்பலிலிருந்து அந்த கயிறு திமிங்கலத்தின் கழுத்தில் சிக்கி இருந்தது தெரியவந்தது. இதனால் வாயை திறக்க முடியாமலும் உண்ண முடியாமலும் துடிப்பில் சிக்கியதால் வேகமாக நீந்த முடியாமலும் திமிங்கலம் தவித்து வந்தது.

இதனை கண்ட சில கடலடி ஆய்வாளர்கள் அதனை அகற்ற முடிவு செய்தனர். பின்னர் திமிங்கலத்தை பின் தொடர்ந்து சென்று அவர்கள் நீண்ட போராட்டத்திற்கு பிறகு கயிற்றை அறுத்து எடுத்து அகற்றினர்.

Leave a Reply

Right Menu Icon