--- --:--:-- --

சிஏஏ எதிர்ப்பு: ஜாமியா பல்கலை. மாணவர்களின் பேரணியில் தள்ளுமுள்ளு

4

குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக டெல்லி ஜாமியா பல்கலைக்கழக மாணவர்கள் நாடாளுமன்றத்தை நோக்கி பேரணி நடத்தியதில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. ஜாமியா பல்கலைக்கழக வளாகத்தில் அமைதியான முறையில் போராட்டம் நடத்த டெல்லி காவல்துறை அனுமதி அளித்துள்ளது.

 

இந்நிலையில் குடியுரிமை சட்டத் திருத்தம், தேசிய மக்கள்தொகை கணக்கெடுப்பு மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றுக்கு எதிராக நாடாளுமன்றத்தை நோக்கி பேரணி செல்ல ஜாமியா பல்கலைக்கழக மாணவர்கள் முயற்சித்தனர்.

 

இதனால் அவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தியபோது இருதரப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர் அனைவரும் ஒக்லா அருகே ஹோலி ஃபேமிலி மருத்துவமனை அருகே டெல்லி காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டனர்.

 

இதனிடையே டெல்லி ஷாகின்பார்க் போராட்டத்தால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுவதாகவும், போக்குவரத்து பாதிக்கப்படுவதாகவும் உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. மேலும் இது தொடர்பாக மாநில அரசும், டெல்லி காவல் துறையும் 4 வாரத்தில் பதில் அளிக்க உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் பிறப்பித்து உள்ளது.

 

குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் சாகின் பார்க்கில் பெண்களால் முன்னெடுக்கப்பட்ட போராட்டம் கடந்த டிசம்பர் மாதம் 15ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon