காதலை ஏற்க மறுத்த மாணவி! இளைஞர் தீக்குளிப்பு
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே கல்லூரி மாணவி காதலிக்க மறுத்ததால் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற இளைஞருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சொக்கநாதன் புதூரை சேர்ந்த அருண்குமார் என்ற இளைஞர் அதே பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவரை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார்.
அந்த மாணவி காதலை ஏற்க மறுத்ததால் ஏற்கனவே விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றுள்ளார் அருண் குமார். இந்த நிலையில் பேருந்து நிலையத்தில் நின்றிருந்த கல்லூரி மாணவியிடம் மீண்டும் காதலை தெரிவித்த அருண்குமார் திருமணம் செய்து கொள்ளும்படி கூறி உள்ளார்.
ஆனால் அதற்கு மாணவி மறுக்கவே உடல் மீது பெட்ரோல் ஊற்றி தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றார் .60 சதவீத தீக்காயங்களுடன் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




