--- --:--:-- --

விபத்தில் சிக்கி உயிருக்கு போராடியவரின் சி‌சி‌டி‌வி காட்சிகள்

10

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே கார் மோதி தூக்கி வீசப்பட்டதில் இருசக்கர வாகனத்தில் சென்ற இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. கூனிமேடு பகுதி கிழக்கு கடற்கரை சாலையில் புதுச்சேரி நோக்கி சென்ற இருசக்கர வாகனம் கார் ஒன்றை முந்தி செல்ல முயன்று சாலை நடுவே சென்றுள்ளது.

 

அப்போது எதிரே வந்த கார் மோதியதில் இருசக்கர வாகனம் விபத்துக்குள்ளானது. விபத்தில் ஒருவர் பலியான நிலையில் உயிருக்குப் போராடிய மற்றொருவர் சாலையில் தட்டுத்தடுமாறி அமர்ந்திருக்க அந்த வழியாக சென்றவர்கள் உதவாமல் வேடிக்கை பார்த்தவாறு கடந்து சென்றுள்ளனர்.

 

சிறிது நேரத்திலேயே அவர் உயிரிழந்தார். முதற்கட்ட விசாரணையில் உயிரிழந்த இருவரும் சென்னையை சேர்ந்த அப்துல் காதர் மற்றும் சுரேஷ் என்பது தெரியவந்துள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon