--- --:--:-- --

பெண்கள் பூப்பெய்திவிட்டாலே திருமணத்திற்கான வயதை எட்டிவிட்டதாக கருதலாம் : பாக். நீதிமன்றம் தீர்ப்பு

10

பெண்கள் பூப்பெய்திய விட்டாலே திருமணத்திற்கான வயதை எட்டி விட்டதாக கருதலாம் என பாகிஸ்தான் நீதிமன்றம் தீர்ப்பளித்து இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தானின் சிறுபான்மை கிறிஸ்துவ மதத்தை சேர்ந்த 14 வயது உமா என்ற சிறுமி கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் கடத்தப்பட்டார்.

 

சிறுமியை கடத்திய அப்துல் ஜாபர் என்ற இளைஞர் அவரை கிறிஸ்தவ மதத்தில் இருந்து இஸ்லாம் மதத்திற்கு கட்டாய மதமாற்றம் செய்து திருமணம் செய்துகொண்டார். சிறுமியின் பெற்றோர் இதுதொடர்பாக சிந்து மாகாண உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம் உமாவுக்கு திருமண வயதான 18 வயது ஆகவில்லை என்றாலும் அவர் பூப்பெய்தி விட்டதால் இஸ்லாமிய ஷரியா சட்டப்படி இந்த திருமணம் செல்லும் என பரபரப்பு தீர்ப்பை வழங்கியுள்ளது.

 

இந்த தீர்ப்பை எதிர்த்து பாகிஸ்தான் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்போவதாக சிறுமியின் பெற்றோர் தெரிவித்துள்ளனர். கடத்தி கட்டாய திருமணம் செய்து வைக்கப்பட்ட சிறுமியின் திருமணத்தை உயர் நீதிமன்றமே அங்கீகரித்த சம்பவம் பெரும் சர்ச்சையையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Right Menu Icon