கொரானாவுக்கு சீனாவில் அமெரிக்கர் ஒருவர் பலி
உகான் நகரில் கொரானா பாதித்த அமெரிக்க நாட்டவர் ஒருவர் இன்று உயிரிழந்ததாக பெய்ஜிங்கில் உள்ள அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது, 60 வயதான இந்த நபர் ஒருவர் தொற்றுக்கு ஆளாகி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டும் பலனின்றி கடந்த ஆறாம் தேதி மரணமடைந்து விட்டதாக அமெரிக்க தூதரகம் செய்திக்குறிப்பு ஒன்றில் தெரிவித்துள்ளது.
இறந்த நபரின் குடும்பத்தினர் அளித்த வேண்டுகோளை ஏற்று அவர் குறித்த மேலதிக விபரங்களை வெளியிடவில்லை.கொரானாவிற்கு சீனர்கள் கொத்துக்கொத்தாக பலியாகும் நிலையில் சீனாவில் அதற்கான முதல் வெளிநாட்டவரை என்று கூறப்படுகிறது.






