--- --:--:-- --

இயற்கை மருத்துவம் மற்றும் யோகா அறிவியல் பாடத்திட்டத்தை பயில தற்போது இளம் தலைமுறையினர் அதிக ஆர்வம் செலுத்தி வருவதாக மத்திய அரசின் யோகா மற்றும் இயற்கை மருத்துவ ஆணையத்தின் இயக்குனர் தகவல் !!!

19

கோவையை அடுத்த நவக்கரை பகுதியில் உள்ள ஜே.எஸ்.எஸ்.இயற்கை மருத்துவம் மற்றும் யோகா அறிவியல் கல்லூரியின் 17 வது பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது. கல்லூரி முதல்வர் டாக்டர் நவீன் ஹலப்பா தலைமையில் நடைபெற்ற இதில் முன்னாள் ஐ.ஏ.எஸ்.அதிகாரி சத்யன் மற்றும் மைசூர் ஜே.எஸ்.எஸ்.ஆயுர்வேத மருத்துவகல்லூரியின் முதல்வர் டாக்டர் ரமேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் சிறப்பு விருந்தினராக மத்திய அரசின் யோகா மற்றும் இயற்கை மருத்துவ ஆணையத்தின் இயக்குனர் டாக்டர் ராகவேந்திர ராவ் கலந்து கொண்டு இயற்கை மருத்துவம் மற்றும் யோகா அறிவியல் பட்ட படிப்பு முடித்த 55 மாணவ, மாணவிகளுக்கு பட்டம் வழங்கி பேசினார்.

 

அப்போது அவர், புற்றுநோய் போன்ற கடினமான நோய் சிகிச்சைகளை யோகாவுடன் சேர்ந்து அளிக்கும் போது நல்ல மாற்றம் கிடைப்பதாகவும்,தற்போது அமெரிக்கா போன்ற மேலை நாட்டு பல்கலைகழகங்கள் யோகா பாடத்திட்டத்தை பின்பற்றுவதாகவும்,அதே போல இயற்கை மருத்துவம் மற்றும் யோகா அறிவியல் பாடத்திட்டத்தை பயில தற்போது இளம் தலைமுறையினர் அதிக ஆர்வம் செலுத்தி வருவதாக அவர் குறிப்பிட்டார்.விழாவில் இயற்கை மருத்துவம் மற்றும் யோகா பாடத்தில் அகாடமி அளவில் முதல் இரண்டு இடங்களை பிடித்த பிரியங்கா மற்றும் நந்தினி மாணவிகளுக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.

இந்த பட்டமளிப்பு விழாவில் கல்லூரி ஊழியர்கள், பெற்றோர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Right Menu Icon